SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெலமாரனஅள்ளி கிராமத்தில் மஞ்சு விரட்டு

2022-01-29@ 12:56:47

தர்மபுரி: பாலக்கோடு அருகே பெலமாரனஅள்ளி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பெலமாரனஅள்ளி கிராமத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், சீரியம்பட்டி, பஞ்சப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

முன்னதாக கிராம மக்கள், மேளதாளங்களுடன் கோ பூஜை செய்து, காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டனர். இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். காளைகள் ஓடும் இடத்தில், பார்வையாளர்கள் மீது பாயாமல் இருப்பதற்காக பாதையின் நான்கு பக்கமும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. திடீரென கூட்டத்திற்குள் புகுந்த சில காளைகள் முட்டி தூக்கி வீசியதில், பெலமாரனஅள்ளி கிராமத்தை சேர்ந்த மாதப்பன் என்பவர் காயமடைந்தார்.

அவரை மருத்துவக்குழுவினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். மஞ்சு விரட்டு நிகழ்ச்சியையொட்டி, பாதுகாப்பு பணியில் 20க்கும் மேற்பட்ட மாரண்டஅள்ளி போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்