SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

2022-01-29@ 12:54:50

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை 247 வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கிச் செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பறவைகள் காலில் வளையம் விடப்பட்டு பறவைகள் செல்லும் தூரம் வந்து செல்லும் நாடு குறித்து கணக்கிடப்படுகிறது. பறவைகள் வந்து செல்லும் இந்த சீசன் காலத்தில் ஜனவரி கடைசி வாரத்தில் பறவை கணக்கெடுக்கும் பணி கோடியகரை வனத்துறையின் மூலம் நடத்தப்படுகிறது.

வழக்கம் போல இந்த ஆண்டு இரு தினங்கள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஏவிசி.கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வளர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் கல்லூரி உதவி பேராசிரியர்கள் மித்ரா குழுவினர்கள் கலந்துகொண்டனர். நேற்று காலை பறவைகள் இனம் கண்டறிய பயிற்சி வகுப்புகளும் அதனை தொடர்ந்து மாலை பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற பறவைகள் கணக்கெடுக்கும் பயிற்சியில் மும்பை பறவை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி பாலச்சந்திரன், கோடிக்கரை வனச்சரகர் அயூப்கான் கல்லூரி உதவி பேரசிரியர் பாஸ்கரன், சிவகணேசன், வனவர் சதிஷ், விமானப்படை உதவி அலுவலர் சைலேந்திரசிங் மற்றும் வனத்துறையினர் கலந்துகொண்டனர். இன்று காலை தமிழ்நாடு முதன்மை தலைமை வன உயிரிக் காப்பாளர் சேகர்குமார் நிரோஜ், திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதிஷ் மற்றும் நாகை வனஉயிரினக் காப்பாளர் யோகேஸ்குமார் மீனா ஆகியோர் கணக்கெடுக்கும் பணியில் களந்துகொள்கிறார்கள் என கோடிக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்