SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

108 ஆம்புலன்சில் சுக பிரசவம்

2022-01-29@ 12:53:12

அந்தியூர்: அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி சின்ன செங்குலம் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன் மனைவி  சித்ரா. இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கர்பிணியாக இருந்தவருக்கு நேற்று காலை பிரசவ  வலி ஏற்பட்டடுள்ளது. உடனே 108 ஆம்புலன்சுக்கு அழைத்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குமரேசன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், சித்ராவிற்கு பிரசவ வலி அதிகமானது.

பெரிய செங்குலம் எனும் இடத்தில் வரும்போது, ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ நுட்புணர் சிவா பிரசவம் பார்த்தார் . அப்போது அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு பின் தாயும் சேயும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். தாயையும், சேயையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை மலைவாழ் மக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்