SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு பொது சின்னம்... விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு

2022-01-29@ 12:41:08

சென்னை: விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு ஊர்களில் பல பதவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டதில் 115 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியது.வெற்றி பெற்றவர்களை சென்னைக்கு அழைத்து விஜய் விருந்தளித்தார். பிறகு அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்.19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  தொடங்கியுள்ளது. பிப்.22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இதிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஜய் மக்கள் இயக்கம் இன்று ஆலோசனை நடத்தியது. சென்னை, பனையூரில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனிடையே, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்து பதில் கடிதம் அனுப்பியுள்ள மாநில தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே பொது சின்னம் ஒதுக்க முடியும் என்றும் மற்ற இயக்கங்களுக்கு சுயேட்சை சின்னங்களே சுழற்சி முறையில்  ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்