SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புலிகள் கணக்கெடுப்பு பணி: காரையாறு கோயிலுக்கு செல்ல 6ம்தேதி வரை தடை நீடிப்பு

2022-01-29@ 12:31:27

வி.கே.புரம்: கொரோனா பரவல் மூன்றாம் அலை எதிரொலியாக கடந்த 7ம் தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் வழக்கம்போல கோயில்களில் சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடந்தன. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடு தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை வழக்கம்போல் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. பாபநாசம் உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே குவிந்தனர்.

தாமிரபரணியில் புனித நீராடி கோயிலில் தரிசனம் செய்தனர். ஆனால் காரையாறு சொரிமுத்தையனார் கோயிலில் பக்தர்கள் செல்ல தடை 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருவதால் காரையாறு சொரிமுத்தைய்யனார் கோயிலில் பக்தர்கள் செல்வதற்கு தடை உள்ளது. இதனால் பாபநாசம் சோதனைச்சாவடி மூடப்பட்டது. இதேபோல் அகத்தியர் அருவிக்கு செல்லவும் 6ம் தேதி வரை தடை உள்ளது. இதனால் பாபநாசம் சோதனைச்சாவடி மூடப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

  • odisha_park

    இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்