SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு பள்ளி மாணவிக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் சீட்

2022-01-29@ 11:56:25

நித்திரவிளை: ஏழுதேசப்பற்று அரசு மேல் நிலைப் பள்ளி மாணவிக்கு அரசு  ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்தது. நித்திரவிளை அருகே தெருவுமுக்கு பகுதியை சேர்ந்தவர் நிதி(17).இவர் ஏழுதேசப்பற்று அரசு மேல் நிலைப் பள்ளியில் கணித பாடப்பிரிவில் பயின்று பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் வீட்டிலிருந்தே நீட் தேர்வு பயிற்சி பெற்று தேர்வு எழுதினார். இவருக்கு 254 மதிப்பெண் கிடைத்துள்ளது.

கடந்த கல்வி ஆண்டில் குமரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று முதல் முயற்சியில் பெற்ற அதிக மதிப்பெண் இதுவாகும்.  இவருக்கு குலசேகரம்  முகாம்பிகை கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில்  மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில் மருத்துவ படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும் என்று குடும்பத்தினர்  கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்