மயானத்திற்கு பாதைவசதி இல்லாததால் இறந்தவர் உடலை கண்மாய் நீரில் இறங்கி சுமந்து செல்லும் அவலநிலை
2022-01-29@ 11:52:10

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே வார்ப்பட்டி ஊராட்சியை சேர்ந்த நல்லூர் கிராம மக்களுக்கான மயானத்திற்கு பாதைவசதி இல்லாதததால் இறந்தவர் உடலை கண்மாயில் இடுப்பளவு தண்ணீரில் சுமந்து ெசன்றனர். பொன்னமராவதி அருகே வார்பட்டி ஊராட்சி நல்லூரில் மயானத்திற்கு முறையான பாதை வசதி இல்லை என கூறப்படுகிறது. இதனால் கண்மாய்க்குள் இடுப்பளவு தண்ணீரில் நீந்தியபடி இடுகாடு மற்றும் சுடுகாட்டுக்கு இறந்தவரின் உடலை கொண்டு செல்லும் நிலை இருந்து வருகிறது. அடையாஞ்சகண்மாய் கண்மாய், சின்னமுத்தி கண்மாய் ஆகிய இரண்டு கண்மாய்களை தாண்டி ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு சுமந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ஐந்து நபர்கள் இறந்தனர். ஒவ்வொரு முறையும் இறந்துபோனவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல முறையான பாதை வசதி இல்லை என்பதால் கண்மாயில் இறங்கி கொண்டு செல்வதால் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே நல்லூரில் உள்ளவர்களுக்கு சுடுகாட்டிற்கு முறையாக பாதை வசதி செய்துகொடுக்கவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
இனி பெட்ரோல் கவலை இல்லை!: பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிக்கலாம் : பழனி மாணவரின் அசாத்திய கண்டுபிடிப்பு.!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கிராமமே கூடி மீன்பிடித்து உற்சாகம்..!!
சுகாதாரத் துறையில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
செஞ்சி அருகே பரபரப்பு ஓபிஎஸ் விழாவில் பொருட்களை அள்ளிச் சென்ற அதிமுகவினர்: பீரோ, சீர்வரிசை பொருட்களுடன் ஓட்டம்
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பால் கச்சா எண்ணெய் வயலில் பரவியது
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு: பாசனத்துக்காக முதல்வர் நாளை தண்ணீர் திறப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்