ஆற்காட்டில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி மூடப்பட்டுள்ள அண்ணாசிலை: அகற்ற கோரிக்கை
2022-01-29@ 11:42:44

ஆற்காடு: ஆற்காட்டில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி அண்ணாசிலையை மூடி போடப்பட்டுள்ள துணியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 26ம் தேதி அறிவித்துள்ளது. அதன்படி 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
இதனால் ஆற்காடு மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை அகற்றப்பட்டு வருகிறது. மேலும் ஆற்காடு வேலூர் மெயின் ரோட்டில் உள்ள அண்ணாசிலை துணி போட்டு மூடப்பட்டுள்ளது. மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகத்தில் உள்ள காந்தி சிலையை தவிர்த்து அண்ணா, இந்திராகாந்தி, எம்ஜிஆர் சிலைகளையும் துணி போட்டு மூட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சமுதாய தலைவர்கள் மற்றும் மறைந்த தலைவர்களின் சிலைகளை மூடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி ஆற்காட்டில் அண்ணாசிலை மூடப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. எனவே அண்ணாசிலையை மூடிய துணிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கிராமமே கூடி மீன்பிடித்து உற்சாகம்..!!
சுகாதாரத் துறையில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
செஞ்சி அருகே பரபரப்பு ஓபிஎஸ் விழாவில் பொருட்களை அள்ளிச் சென்ற அதிமுகவினர்: பீரோ, சீர்வரிசை பொருட்களுடன் ஓட்டம்
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பால் கச்சா எண்ணெய் வயலில் பரவியது
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு: பாசனத்துக்காக முதல்வர் நாளை தண்ணீர் திறப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி 4ம் ஆண்டு நினைவு தினத்தில் பொதுமக்கள் அஞ்சலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்