SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரியலூர் மாவட்டத்தில் முந்திரியில் சூரை நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு: மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள்

2022-01-29@ 11:41:36

தா.பழூர்: அரியலூர் மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அரியலூர் மாவட்டத்தின் பிரதான பயிராக முந்திரி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக அதிகப்படியாக முந்திரி விலைவிக்கப்படுவதால் முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பதும் முந்திரி விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, தா.பழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தொடர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவால் முந்திரியில் சூரை நோய் தாக்குதல் அதிகமாக தென்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நோய் தாக்குதலால் தற்போது முந்திரியில் வைக்கப்படும் பூ மற்றும் நுனி கொழுந்து இலைகள் தானாக கருகி வருகிறது. இதனால் முந்திரியில் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து சிங்கராயபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சார்லஸ் கூறுகையில், கடந்த 45 வருடங்களாக முந்திரி பயிர் சாகுபடி செய்து வருவதாகவும் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக கூறுகின்றார்.

பல வருடங்களாக இருந்து வந்த அதிக காய்ப்புகள் தரக்கூடிய பெரிய அளவிலான முந்திரி மரங்கள் சூரை நோய்க்கு உட்பட்டு மரங்கள் பட்டுப் போய் இறந்து விடுகின்றன. இதனால் பெரிய அளவில் விளைச்சலைத் தரக்கூடிய மரங்கள் இறப்பு என்பது விவசாயிகள் ஈடு செய்ய முடியாத இழப்பாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நோய்க்கு என்ன செய்வதென்று தெரியாமல் இரண்டு முறைக்கு மேல் மருந்து தெளித்து உள்ளதாகவும் இருப்பினும் இந்த நோயை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் கூறுகின்றனர்.

ஒரு ஏக்கருக்கு ரூ.5000 முதல் ரூ.8000 வரை செலவு செய்து மருந்து தெளித்து வருவதாகவும் இருப்பினும் நோயை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் கூறுகின்றார். ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய முந்திரி பயிர் தற்போது பூ, நுனி கொழுந்து மற்றும் மரம் கருகி வருவதாலும் பெரிய அளவில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆகையால் அரசு அதிகாரிகள் முந்திரிப் பயிர் களை ஆய்வு செய்து ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்