மராட்டியத்தில் பெண் காவலர்களுக்கான பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு : காவல்துறை டிஜிபி
2022-01-29@ 11:37:43

மும்பை : மராட்டிய மாநிலத்தில் பெண் காவலர்களுக்கான பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் பெண் காவலர்கள்12 மணி நேரத்துக்குப் பதிலாக 8 மணி நேரம் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என்று அம்மாநில காவல்துறை டிஜிபி சஞ்சய் பாண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஆண் மற்றும் பெண் காவலர்களின் பணி நேரம் 12 மணி நேரமாக இருக்கும் நிலையில், தற்போது பெண் காவலர்களுக்காண பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக நாக்பூர், அமராவதி நகரங்கள் மற்றும் புனே கிராமப்புறங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும் அவசர நிலை மற்றும் விழாக் காலங்களில் பெண் காவலர்களுக்கான பணி நேரத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் அல்லது துணை காவல் ஆணையர்களின் அனுமதியுடன் அதிகரிக்கலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு செயல்படுத்தப்படுவதை யூனிட் கமாண்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பெண் அதிகாரிகளுக்கு சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையை வழங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
கட்சியில் இருந்து விலகுவதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் ஹர்திக் படேல் அறிவிப்பு
ஆந்திராவில் மதுபாட்டில்களை கடனுக்கு தர மறுத்த கடை ஊழியருக்கு அடிஉதை...மூன்று இளைஞர்களை தேடிவருகிறது காவல்துறை
ஆளுநர் காலதாமதம் செய்தது தவறு.. பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரம்!!
30 ஆண்டுகால சட்டப்போராட்டம் வெற்றி... ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,829 ஆக அதிகரிப்பு.. 33 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை
ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை பாதுகாக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!