பெண்கள் குளியலறையில் கேமரா வைத்தவர் கைது
2022-01-29@ 08:40:20

ஆலந்தூர்: வளசரவாக்கத்தை சேர்ந்தவர் பாரதி (49). மதுரவாயல் பகுதி திமுக மகளிரணி அமைப்பாளரான இவர், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று கட்சி நேர்காணலுக்காக சென்றுவிட்டு, கிண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். முன்னதாக அங்குள்ள பாத்ரூம் சென்றபோது, அங்கிருந்த அட்டை பெட்டியில் செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
அதை எடுத்து பார்த்தபோது, அதில் வீடியோ பதிவாகிக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அந்த செல்போனை கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து, புகார் கொடுத்தார். விசாரணையில் செல்போனை மறைத்து வைத்திருந்தது ஓட்டலில் எலக்ட்ரீசியனாக வேலை செய்யும் கண்ணன் (28) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
செயின் பறிக்க முயற்சி சிறுவன் உள்பட 2 பேர் கைது
அண்ணனூர் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் சிக்கிய திருடன்: கூட்டாளிக்கு வலை
மூதாட்டியிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு வலை
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த அரியவகை விலங்குகள் பறிமுதல்: பயணியிடம் விசாரணை
சில்லரை கொடுப்பதில் பெண் பயணியுடன் தகராறு அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கடத்திய பாமக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது
பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் சர்வேயர் கைது
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!