அலுவலகத்தில் புகுந்து தகராறு காங்கிரஸ் நிர்வாகி மீது ஒழுங்கு நடவடிக்கை : கே.எஸ்.அழகிரிக்கு, ஐஎன்டியுசி வலியுறுத்தல்
2022-01-29@ 07:38:21

சென்னை, ஜன. 29: காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐஎன்டியுசி மாநில தலைவர் முனுசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராயபுரத்தில் வசித்து வரும் எம்.பன்னீர்செல்வம் என்பவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். இவர் ஐஎன்டியுசி துணை தலைவராக பதவி வகித்து வந்தார். அவர் சங்கத்தின் பதவியை பயன்படுத்தி நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டதால் அவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மீண்டும் அடுத்த இரண்டு நாட்களில் சங்க கட்டிடத்தில் இருந்த போர்டை உடைத்து எறிந்துள்ளார். இதுபோன்று காங்கிரஸ் கட்சிக்கும், தொழிற்சங்கத்துக்கும் எதிராக நடந்து வரும் எம்.பன்னீர்செல்வத்துக்கு, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பொறுப்பிலிருந்து நீக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்கும் என நம்பிக்கை இருக்கிறது: அண்ணாமலை பேட்டி
பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
தமிழகத்தில் மதுவிலக்கு: ராமதாஸ் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம்
பாஜ.வுக்கு எதிராக 3வது அணி அமைக்க தீவிர முயற்சி ஜனாதிபதி பதவிக்கு குறி: தேசிய பயணத்தில் சந்திரசேகர ராவ் தலைவர்களுடன் அடுத்தடுத்து சந்திப்பு
மேற்கு வங்கத்தில் பாஜ எம்பி. மீண்டும் தாவல்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்