சமந்தா பற்றி கமென்ட் நாகார்ஜுனா மறுப்பு
2022-01-29@ 00:55:02

ஐதராபாத்: சமந்தா பற்றி தான் கூறியதாக வந்த தகவல் பொய்யானது என நாகார்ஜுனா மறுத்துள்ளார். நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா, நடிகை சமந்தா ஆகியோர் தங்களது திருமண உறவை முறித்துக்கொண்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த நாகார்ஜுனா, இந்த முடிவு துரதிருஷ்டவசமானது. இருவரும் பிரச்னைகளை பேசி தீர்த்து இருக்கலாம் என கூறியிருந்தார். இந்நிலையில் ‘கடந்த 2021ம் ஆண்டு புத்தாண்டுக்கு பிறகுதான் நாக சைதன்யா, சமந்தா இடையே பிரச்னை எழுந்தது.
விவாகரத்தை முதலில் கேட்டது சமந்தாதான்’ என நாகார்ஜுனா நேற்று முன்தினம் சொன்னதாக சில மீடியாவில் தகவல் வந்தது. இதுகுறித்து டிவிட்டரில் நாகார்ஜுனா நேற்று கூறியிருப்பதாவது: சைதன்யா, சமந்தா பற்றி நான் சொன்னதாக எலெக்ட்ரானிக் மீடியாவிலும் சமூக வலைத்தளத்திலும் ஒரு செய்தி வெளியானது. அது முழுக்க பொய். அப்படி ஒரு கருத்தை நான் சொல்லவே இல்லை. வதந்திகளை செய்தியாக போடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு நாகார்ஜுனா கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டாக சிறையில் வாடிய பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம்
லாரி மீது மோதிய கார் தீப்பிடித்தது: 3 பேர் உடல் கருகி பரிதாப சாவு: திருப்பதி அருகே சோகம்
பேரறிவாளன் வழக்கு தொடர்பான 29 பக்க தீர்ப்பு நகலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது உச்சநீதிமன்றம்
லாரி மீது மோதிய கார் தீப்பிடித்தது 3 பேர் உடல் கருகி பரிதாப சாவு: திருப்பதி அருகே சோகம்
பழைய பேருந்துகளை பள்ளி வகுப்பறையாக மாற்ற திட்டம்: கேரளாவில் புதிய முயற்சி
கொச்சி அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தூக்கு போட்டு தற்கொலை: காதலன் தலைமறைவு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!