காரில் கடத்திய குட்கா பறிமுதல் திருவள்ளூர் வாலிபர்கள் கைது
2022-01-28@ 17:56:27

வேலூர்: காரில் கடத்திய ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 வாலிபர்களை ைகது செய்தனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட்டில் போலீசார் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ய நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் நின்றது. போலீசார் காரை விரட்டிச்சென்றனர். இதனால் காரை சிறிது தூரத்தில் நிறுத்திவிட்டு, அதில் இருந்த 4 பேர் இறங்கி தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை விரட்டிப்பிடித்தனர். 3 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பிவிட்டார். இதையடுத்து காரை சோதனை செய்தபோது அதில், 10 மூட்டைகளில் புகையிலை பொருட்கள், 8 மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், பிடிபட்டவர்கள் திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகரை சேர்ந்த ரமேஷ்(27), மனோரி (26), பெங்களூரு சுல்தான்பூர் பகுதியை சேர்ந்த சுனில்(26) என்பதும், தப்பியோடியவர் ராஜஸ்தானை சேர்ந்த சத்தியபால் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் குட்காவை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்துள்ளனர். மேலும் சில மூட்டைகளை ஆம்பூரில் சிலருக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது. மீதமுள்ளவற்றை வேலூரில் சிலருக்கும், சென்னையில் சிலருக்கும் சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளனர். ைகப்பற்றப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1.20 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து ரமேஷ் உள்பட 3 பேரை கைது செய்தனர். தப்பியவரை தேடிவருகின்றனர்.
மேலும் செய்திகள்
நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி அமெரிக்காவில் இருந்தபடியே கொள்ளையரை விரட்டிய வக்கீல்: திண்டுக்கல் வீட்டிற்குள் புகுந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்
புதுக்கோட்டை அருகே கணவருடன் தகராறில் 2 குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய் கைது
கம்பம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு பேரன், மருமகளை தீவைத்து எரித்த மாமனார் கைது: குழந்தை சாவு; மருமகள் உயிர் ஊசல்
சாலை தடுப்புச்சுவர் அமைக்க ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
நிலக்கோட்டை அருகே மீன் விற்ற தகராறு கிராமத்தில் புகுந்து கூலிப்படை தாக்குதல்: பெட்ரோல் குண்டு வீச்சு; 5 பேருக்கு அரிவாள் வெட்டு
விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!