கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு விற்பனையும் உயர்ந்தது
2022-01-28@ 12:58:14

ஈரோடு : ஈரோடு மாட்டு சந்தைக்கு மாடுகளின் வரத்து அதிகரித்ததோடு விற்பனையும் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையானது கடந்த சில வாரங்களாக மந்த நிலையில் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் விரைவில் கோடை காலம் தொடங்க உள்ளதால் நேற்று நடைபெற்ற மாட்டு சந்தையில் மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதே போல வெளிமாவட்ட வியாபாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் விற்பனை வழக்கத்தை விட கூடுதலாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.
இது குறித்து மாட்டு சந்தை நிர்வாகிகள் கூறியதாவது, கடந்த 4 வாரங்களாக மாடுகளின் வரத்து குறைவாக காணப்பட்டது. இந்த வாரம் மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளது. 600 மாடுகள்,300 எருமை,250 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு வந்துள்ளன. மாடுகளை வாங்குவதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்துள்ளனர். வழக்கத்தை விட கூடுதலாக வியாபாரம் நடந்துள்ளது. கோடை காலம் தொடங்க உள்ளதால் இன்னும் 3 மாதங்களுக்கு விற்பனைக்கு வரும் மாடுகளின் வரத்து அதிகரிக்கும். இவ்வாறு கூறினர்.
மேலும் செய்திகள்
கல்வி உதவி தொகை பெற்ற பிறகு இடை நிற்றல் ஏற்பட்டதாக சான்றிதழ்களை கொடுக்க மறுப்பது ஏற்க தக்கது அல்ல: ஐகோர்ட் கிளை
ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் வேண்டுகோள்: இரவு பகலாக தேசியக்கொடி தயாரிப்பு பணியில் மகளிர் சுய உதவிகுழு
கோவையில் விபத்தில் இருந்து தப்பிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்: தண்டவாளத்தில் பழுதடைந்து நின்ற லாரியால் பரபரப்பு; 3,000 பயணிகள் அதிர்ச்சி
தொடரும் வேட்டை!: அரக்கோணம் அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு..இந்து சமய அறநிலையத்துறை அதிரடி..!!
நிலச்சரிவால் மூடப்பட்ட கொச்சி - தனுஷ்கோடி சாலையில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி
தியாகதுருகம் அருகே 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கால கல்வெட்டு, சிலைகள் கண்டுபிடிப்பு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!