உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36.64 கோடியாக உயர்வு!!
2022-01-28@ 07:54:36

ஜெனீவா : உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை இன்னமும் மிரட்டி வருகிறது. உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வரும் கொரோனாவால் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தொற்று பாதிப்பின் வீரியம் சற்று தணிந்தாலும் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை.
இந்த நிலையில், உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36.64 கோடியாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56.65 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 28.97 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7.14 கோடியாக உள்ளது. இதில் தீவிர பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 96,059- ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக பாதிப்பு பதிவான நாடுகள் விவரம்;
அமெரிக்கா - 4,61,729
பிரான்ஸ்-3,92,168
இந்தியா- 2,48,697(வோர்ல்டோமீட்டர்ஸ் தகவல்)
பிரேசில்-2,28,972
இங்கிலாந்து 96,871
மேலும் செய்திகள்
ஆஸ்திரேலியா தேர்தலில் லிபரல் கட்சி தோல்வி: பிரதமர் பதவியை இழக்கிறார் மோரிசன்
உக்ரைன் - லடாக்கில் என்ன நடக்கிறது? : லண்டன் மாநாட்டில் ராகுல் குற்றச்சாட்டு
சிகாகோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு... 8 பேர் படுகாயம்!!
இலங்கையை கொடிய உணவு பஞ்சம் தாக்குவது உறுதி... மக்கள் சிறு தானியங்களை உடனே பயிரிட வேண்டும் : பிரதமர் ரணில் உத்தரவு!!
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.61 கோடி ஆக உயர்வு!!
பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பும் இல்லை: திவாலாகிறது இலங்கை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்