தமிழகத்தில் 600 இடங்களில் இன்று 2-வது வார பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்: ஆரம்ப அரசு மருத்துவமனை, சுகாதாரநிலையங்களில் முகாம்
2022-01-27@ 11:13:23

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 2-வது வாரமாக 600 இடங்களில் சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் 160 இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி கடந்த 10 ஆம் தேதி முதல் தொடங்கியது. முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி பூஸ்டர் போடும் பணி நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 9 மாதங்கள் நிரம்பியவர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தொடங்கியபோது, 4 லட்சம் பேர் தகுதியானவர்கள் என்று கருதப்பட்ட நிலையில் ஒவ்வொரு வார வியாழக்கிழமையும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு சிறப்பு முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இன்று 2-வைத்து வாரமாக தமிழகம் முழுவதும் 600 இடங்களிலும், சென்னையில் 160 இடங்களிலும் சிறப்பு பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதாரநிலையங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை நெருங்கியது.! டெல்டா பாசனத்திற்கு 24ம் தேதி முதல்வர் தண்ணீர் திறக்கிறார்
பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையில் நல்லது எதுவும் இல்லை; அமைச்சர் பொன்முடி பேச்சு
அரிசி, மண்ணெண்ணை கடத்தல் தடுப்பால் ரூ.2,630 கோடி சேமிப்பு; அமைச்சர் சக்கரபாணி தகவல்
கோயில் குளத்தை தூர்வாரிய போது சோழர் காலத்து 7 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு
உதகைப் பயணத்தில் இன்று பழங்குடியினரான தோடர்களின் கிராமத்திற்குச் சென்று, அவர்களது தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்