நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி!: சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்..!!
2022-01-27@ 11:11:26

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். தற்போது நடப்பாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இப்போட்டியில் 600 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
6 சுற்றுகளாக நடைபெறும் ஜல்லிக்கட்டில், மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் இருசக்கர வாகனங்கள், பீரோ, கட்டில், சைக்கிள், தங்கம், வெள்ளி காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க 6 மருத்துவக் குழுவினர், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக குறைந்த அளவு பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் ஆர்வமுடன் அடக்க முயற்சித்தனர். குமாரபாளையம் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் போட்டியை கண்டு ரசித்தனர்.
மேலும் செய்திகள்
25 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதி கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த மண்ணுளி பாம்பு: பத்திரமாக மீட்பு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!