உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவினால் பொருளாதார தடை விதிப்பது உறுதி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை
2022-01-27@ 10:19:15

வாஷிங்டன்: உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவினால் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிப்பது உறுதி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சோவியத் ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருந்த உக்ரைன் கடந்த 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தனி நாடாக உருவானது. எனினும் அந்நாட்டில் ரஷ்ய மொழி பேசுவோர் அதிக எண்ணிக்கையில் இருப்பதோடு கலாச்சார ரீதியிலும், சமூக ரீதியிலும் ரஷ்யாவோடு பல தொடர்புகளை உக்ரைன் கொண்டுள்ளது. இந்நிலையில் நேக்ட்டோ அமைப்பு உக்ரைனை தன்னுடன் இணைத்துக்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா உக்ரைன் எல்லை அருகே சுமார் 1 லட்சம் படையினரை குவித்துள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்து கொள்வதற்காக ரஷ்யா படைக்குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன. ரஷ்யா இந்த குற்றச்சாட்டை மறுத்தாலும் இரு நாடுகளின் எல்லையில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது பேசிய அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவினால் நிச்சயமாக அதிபர் புதின் மீது தனிப்பட்ட முறையில் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தால் இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய மிகப்பெரிய படையெடுப்பாக அமையும் என கூறினார். இது நடந்தால் மிகவும் மோசமான விளைவுகளை ரஷ்யா எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் எச்சரித்தார். போர் சூழல் ஏற்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்று கூறிய பைடன், அமைதியான சூழலை ஏற்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொண்டால் அதை அமெரிக்கா ஆதரிக்கும் எனவும் கூறினார்.
மேலும் செய்திகள்
ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 35 ஆனது
10 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.13 லட்சம் பரிசு!: மக்கள் தொகையை பெருக்க அதிபர் புதின் அதிரடி அறிவிப்பு..!!
கார்கிவ் நகரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 3 பேர் பலி; 10 பேர் காயம்
சீனாவில் பிறப்பு விகிதம் கடும் சரிவு!: அதிக குழந்தை பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி.. சீன அரசு அதிரடி அறிவிப்பு..!!
ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதிக்கும் வடகொரியா: ஒரே நாளில் 2 ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை
உலகம் முழுவதும் தீவிரமாக பரவும் குரங்கம்மை; 35,000 பேர் பாதிப்பு!: தடுப்பூசிகளின் தேவை பன்மடங்கு அதிகரிப்பு.. WHO எச்சரிக்கை..!!
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...