தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
2022-01-27@ 09:39:53

சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி ஊழியர்களிடம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஒரு சில அதிகாரிகள் மட்டும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று பாடினர். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பலர் எழுந்து நிற்காமல் அமர்ந்து கொண்டே இருந்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த பிறகு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலர் இருக்கையில் அமர்ந்து இருந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் ‘ஏன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நின்று மறியாதை செய்யவில்லை’ என்று கேட்டனர். அதற்கு அமர்ந்து இருந்த அதிகாரிகள் ‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.... கோர்ட் உத்தரவிட்டுள்ளதா எழுந்து நிற்க வேண்டும் என்று.....’ கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காமல், அவமதித்து, கேள்வி கேட்ட நபர்களிடம் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வாக்குவாதம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் தமிழ் தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அலட்சியம் காட்டியதுடன், அரசு உத்தரவை மீறி செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை என அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ விபத்து: கண் எரிச்சல், சுவாசக்கோளாறால் மக்கள் அவதி
சாலை தடுப்பில் பைக் மோதி மகன் பலி; தந்தை படுகாயம்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
குழாய் மாற்றியமைக்கும் பணி காரணமாக கொடுங்கையூரில் 23ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு
இருசக்கர வாகனங்களில் இனிமேல் பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்
தமிழகத்தில் கள்ளச்சாராயம் போலி மதுவை ஒழிக்க நடவடிக்கை: எடப்பாடி கோரிக்கை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்