ஜிசிஎஸ் கண்டிகை கிராமம் மேட்டுக்காலனியில் சுடுகாடு அமைக்க வேண்டும்: கலெக்டரிடம் கோரிக்கை
2022-01-27@ 02:01:10

திருவள்ளூர்: ஜிசிஎஸ் கண்டிகை கிராமம், மேட்டுக்காலனி பகுதியில் ஏற்கனவே சடலங்களை அடக்கம் செய்து வந்த இடத்தை மீண்டும் வழங்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.புரட்சி பாரதம் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் மணவூர் ஜி.மகா, மாவட்ட செயலாளர் புரட்சி ஜெ.ரமேஷ், மாவட்ட தலைவர் பி.ஏ.சதாசிவம் ஆகியோர் திருவள்ளூர் கலெக்டர் மற்றும் திருத்தணி ஆர்டிஓ ஆகியோரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது.திருத்தணி தொகுதி, ஆர்கே பேட்டை ஒன்றியம், ஜிசிஎஸ் .கண்டிகை கிராமம் மேட்டுக்காலனியில் வசிக்கும் பொதுமக்கள், சாலை ஓரம் உள்ள சுடுகாட்டில் காலம், காலமாக சடலங்களை அடக்கம் செய்து வந்தனர்.தற்போது அந்த இடத்தில் சடலங்களை அடக்கம் செய்ய அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். ஜிசிஎஸ் கண்டிகை கிராமம், மேட்டுக்காலனியில் சடலங்களை அடக்கம் செய்வதற்கு வேறு இடம் எதுவும் இல்லை. எனவே ஏற்கனவே சடலங்களை அடக்கம் செய்த இடத்தை, எந்த இடையூறும் இல்லாமல் மீண்டும் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவர்களுடன், போது கட்சியின் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் பழனி, ஆர்கே பேட்டை ஒன்றிய செயலாளர் ஜே.சுரேஷ், என்.சுந்தர் மற்றும் கிராம மக்கள் இருந்தனர்.
Tags:
Request to GCS Kandikai Village Upcountry Sudukadu Collector ஜிசிஎஸ் கண்டிகை கிராமம் மேட்டுக்காலனி சுடுகாடு கலெக்டரிடம் கோரிக்கைமேலும் செய்திகள்
விடுதலையானார் பேரறிவாளன்.. ஆனந்த கண்ணீரில் குடும்பம்... பேரறிவாளனுக்கு இனிப்புகள் ஊட்டி தாய், தந்தை, உறவினர்கள் நெகிழ்ச்சி!!
சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: ஆபத்தான முறையில் பாலத்தைக் கடக்கும் வாகன ஓட்டிகள்
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
சிதம்பரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை : திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் விபரீத முடிவு!!
இலங்கையில் பெட்ரோல், டீசல் கையிருப்பு காலி : இந்தியா 4 லட்சம் டன் டீசலை அனுப்பி உதவி; தமிழக அரசு சார்பிலும் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வில் காப்பி அடிக்க முயற்சி மாணவர்களிடம் ‘மைக்ரோ ஜெராக்ஸ்’ பிட் பேப்பர்கள் ஒரு கிலோ பறிமுதல்: நாமக்கல்லில் கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!