SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவள்ளூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்: ரூ.4 கோடியில் நலத்திட்ட உதவிகள்

2022-01-27@ 01:59:28

திருவள்ளூர்: திருவள்ளூரில் நடந்த குடியரசு தினவிழாவில், கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், தேசிய கொடியேற்றி 34 பேருக்கு ரூ.4 கோடியே 91 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ்  தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், மூவர்ண பலூன்களையும், சமாதானத்தை வலியுறுத்தும் வெண் புறாக்களை வானில் பறக்கவிட்டு, திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, 34 பேருக்கு ரூ.4 கோடியே 91 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தமிழக காவல் துறையில் சாதனை புரிந்த காவலர்களுக்கு தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 26 பேருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் கொரோனா ஊரடங்கு சிறப்பாகப் பணியாற்றிய 78 அலுவலர்களுக்கும், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 188 பேருக்கு சான்றிதழ்களையும், நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.

விழாவில் எஸ்பி வீ.வருண்குமார்,  மாவட்ட வருவாய் அலுவலர் (பொருப்பு) குணசேகரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) சி.வித்யா, (வேளாண்மை) எபினேசர், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் பி.தர், ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் வ.ராஜவேல், சுகாதார துறை துணை இயக்குனர்கள் கே.ஆர்.ஜவர்கலால், எம்.செந்தில்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சுபாஷ் சந்திர போஸ், மாவட்ட குழந்தைகள் நல திட்ட அலுவலர் லலிதா சுதாகர்,  முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ச.கண்ணன், கூடுதல் எஸ்பி க்கள் ஜெசுதாஸ், மீனாட்சி, டிஎஸ்பி சந்திரதாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் செ.அருணா, கோட்டாட்சியர் எம்.ரமேஷ், வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் இல்லம் தேடி அவர்களை கவுரவித்தனர்.
சென்னை, முகப்பேர், வேலம்மாள் முதன்மை பள்ளியில் கொரோனா விதிமுறைபடி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமை வகித்தார். பள்ளியின் கல்வி இயக்குநர் ஜெயந்தி ராஜகோபாலன், முதுநிலை முதல்வர் கே.எஸ்.பொன்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை மாநகர குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் ஜி.கே.கண்ணன்  மூவர்ணக் கொடிற்றினார். ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்க தலைவர் சீனிவாசன் தேசிய கொடியேற்றினார். அரசு வழக்கறிஞர் வெஸ்லி, சங்க செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கன்னியப்பன், துணைத்தலைவர் சாமுவேல், துணைச்செயலாளர் பிரகாஷ், நூலகர் சாந்தகுமார், காசாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மூத்த வக்கில்கள் வேல்முருகன், வெற்றிதமிழன், தினகரன், சசிகுமார், வாசுதேவன்,  ரமேஷ், தலைமை எழுத்தர் நாகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.இதே போல் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மாலா, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தேசிய கொடியேற்றினார். அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழ்செல்வம் முன்னிலையில் தலைமை ஆசிரியர் மகேஸ்வரன், பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், பொறுப்பு தலைமை ஆசிரியர் சுதாகர் ஆகியோர் தேசிய கொடியேற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். காங்கிரஸ் கட்சி சார்பில் பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மாவட்ட பிரதிநிதி செல்வகுமார் தேசிய கொடியை ஏற்றினார். இதில் வக்கில்கள் சீனிவாசன், சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் தலைமை வகித்தார். கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு துணைத் தலைவர் மாலதி குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மாணிக்கம் வரவேற்றார். கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவகுமார் தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தேசிய கொடிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். அதில் கலந்து கொண்ட ஒன்றியக்குழு தலைவர் சிவக்குமார், நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணி காப்பதில் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்றார்.

இதேபோல் கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் நமச்சிவாயம், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் அஸ்வினி சுகுமார், ஏகுமதுரை ஊராட்சி தலைவர் ஸ்ரீபிரியா மகேந்திரன், பன்பாக்கம் ஊராட்சி தலைவர் கே.எஸ்.சீனிவாசன் ஆகியோர் தேசிய கொடியேற்றினர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா, கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
புழல்: புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் குடியரசு தின விழா நேற்று ஒன்றிய ஆணையாளர் வேதநாயகம் தலைமையில் நடந்தது. கிராம ஊராட்சி ஆணையாளர் மம்மு, பொது மேலாளர் மணி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றியக்குழு தலைவர் தங்கமணி திருமால் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றிய குழு துணை தலைவர் சாந்தி பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர்கள் சிவக்குமார், மல்லிகா மீரான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஒன்றிய குழு தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமையில் ஒன்றிய குழு துணைத்தலைவர் வி.கருணாகரன் தேசிய கொடியேற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்த மன்னன், குலசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* 73 மாணவர்கள் 73 நிமிடத்தில் சிலம்பம் சுற்றி சாதனை
செங்குன்றம் அடுத்த வடகரை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில், குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், கலந்து கொண்ட 73 மாணவர்கள், 73 நிமிடத்தில் சிலம்பம் சுற்றி சாதனை செய்தனர். இந்த சாதனை முயற்சி இந்தியா புக் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.இந்த சாதனை நிகழ்ச்சியை தேசிய மனித உரிமைகள் பாதுகாவலர்கள் நிறுவனர் சதாம் உசேன், திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்டக் கழக செயலாளர் ஹரிதாஸ், சிலம்ப ஆசான் ரதி ராஜா ஆகியோர் முன்னிலை நடந்தது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தண்டல் சாதனை நிறுத்துதல், தனிமனித சாதனை நிகழ்ச்சியும் செய்து காட்டப்பட்டது.இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

 • nellai-16

  நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்