ஆவடி மாநகராட்சியில் அதிகாரிகள், ஊழியர்கள் பற்றாக்குறை: காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
2022-01-27@ 01:57:44

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் அதிகாரிகள், ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பற்றாக்குறையை தீர்க்க, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆவடி மாநகராட்சியின் 48 வார்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், அண்ணனூர், கோவில்பதாகை, மிட்டனமல்லி, முத்தாப்புதுபேட்டை ஆகிய பகுதிகள் உள்ளன. ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தை கவனிக்க பொறியாளர் துறை, சுகாதாரத் துறை வருவாய்த் துறை, நகரமைப்புத் துறை அலுவலகத் துறை ஆகியவை உள்ளன. மேற்கண்ட துறைகள் மூலம் சாலை, குடிநீர், தெரு விளக்கு, சுகாதாரம் உள்பட அனைத்து அடிப்படை வசதிகள் மக்களுக்கு செய்து தரப்படுகின்றன.
கடந்த 2019 ஜூன் மாதம் ஆவடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகும், அதிமுக ஆட்சியில் மாநகராட்சிக்கு கூடுதலாக அதிகாரிகள், ஊழியர்கள் நியமனம் செய்வில்லை. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், அதிமுக அரசு செவிசாய்க்கவில்லை. மேலும், நகராட்சியாக இருந்தபோது பணியாற்றி அதிகாரிகள், ஊழியர்கள் பணி இடங்களும் காலியாக இருந்தன. இதனை நிரப்ப உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தற்போது, மாநகராட்சியில் ஒரு உதவி பொறியாளர், ஒரு நகரமைப்பு ஆய்வாளர், ஒரு சுகாதார அலுவலர், 80க்கு மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், மக்கள் நலப் பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதையொட்டி, பல்வேறு பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. ஆவடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியும், கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யவில்லை. இதுமட்டுமின்றி, தற்போது பல துறையில் அதிகாரிகள், ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, ஆவடி மாநகராட்சியில் உள்ள அனைத்து துறைகளிலும் காலியிடங்களை உடனடியாக நிரப்ப மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:
Avadi Corporation officers staff shortage vacancy ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் பற்றாக்குறை காலி பணிமேலும் செய்திகள்
அற்புதம் நிகழ்த்திய அற்புதம்மாள்; 30 ஆண்டு அநீதி வீழ்த்தப்பட்டது!: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை.. தலைவர்கள் வரவேற்பு..!!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு..!!
நடிகர் தனுஷின் 'Wunderbar films' தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனல் மீண்டும் செயல்பட தொடங்கியது
கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு
நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் மதுரை வருகை, அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது: எம்.பி. சு. வெங்கடேசன்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!