SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2022-01-27@ 01:52:11

* இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தில்ரூவன் பெரேரா(39) நேற்று சர்வதேச போட்டியில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேநேரத்தில் உள்ளூர் ஆட்டங்களில் விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.
* ஐசிசி ஒருநாள்  பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா ஆகியோர் தொடர்ந்து 2வது, 3வது இடத்தில் நீடிக்கின்றனர். பாகிஸ்தான் வீரர் பாபர் அஸம் முதல் இடத்தில் உள்ளார்.
* பாகிஸ்தானில் உள்ளூர் டி20 தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக்(பிஎஸ்எல்) இன்று மாலை கராச்சியில் தொடங்குகிறது.
* தடுப்பூசி போடாததால் ஆஸி ஓபனில் ஆட விடாமல் நடப்பு சாம்பியனும், நெம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகாவிச்(செர்பியா) திருப்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில் அடுத்த மாதம் துபாயில் நடைபெற உள்ள ஏடிபி தொடரில் ஜோகோவிச் பங்கேற்க உள்ளார்.
* ஆஸ்திரேலியாவின்  உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் அணியான ‘சிட்னி சிக்சர்ஸ்’ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த அணிக்காக விளையாட ஸ்டீவன் ஸ்மித்துக்கு ‘கிரிக்கெட் ஆஸ்திரேலியா’ நேற்று தடை விதித்துள்ளது.
* வெஸ்ட் இண்டீசில் நடக்கும் ஐசிசி யு-19 உலக கோப்பை போட்டி நடக்கிறது. அதன் பிளேட் பிரிவு முதல் காலிறுதியில்  ஐக்கிய அரபு அமீரகம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தியது. அதேபோல் பிளேட் பிரிவு 2வது காலிறுதியில் அயர்லாந்து அணி 94ரன் வித்தியாசத்தில் கனடாவை வென்றது.
* ‘‘தொடர்ந்து பயோ-பபுளில் இருப்பது எல்லோருக்கும் மன அழுத்தத்தை தருகிறது. விராட் கோஹ்லி அமைதியாகவும், பேட்டிங்கில் கவனம் செலுத்தவும், ஓய்வு தேவை என்று நினைக்கிறேன். எனவே அவர் 2,3 மாதங்கள் ஓய்வில் இருந்தால்,  ஒரு தொடரில் இருந்து விலகி இருந்தால், அது அவருக்கு நல்ல மாற்றத்தை தரும். மீண்டும் புத்துணர்ச்சியுடன் அணிக்கு திரும்ப உதவும்.” என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

 • arungatchimmaa1

  சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்