வன விலங்கு மரபணு ஆராய்ச்சி ஆய்வகம் விரைவில் செயல்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
2022-01-27@ 01:45:16

சென்னை: வனவிலங்குகளின் மரபணு ஆராய்ச்சி தொடர்பான ஆய்வகம் அமைக்க தேவையான அனைத்து இயந்திரங்களும் கொள்முதல் செய்து விட்டதாகவும், விரைவில் ஆய்வகம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்துள்ளது. வன விலங்குகளின் மரபணு தொடர்பான ஆராய்ச்சிகள் செய்ய பிற மாநிலங்களை அணுக வேண்டியுள்ளதால், வனவியல் தடயவியல் ஆய்வகங்களை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி புஷ்பவனம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் ஆகியோர், காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.அப்போது அவர்கள், ஆய்வகம் அமைப்பதற்கு தேவையான அனைத்து இயந்திரங்களையும் அரசு கொள்முதல் செய்துள்ளது. சோதனைகள் நடத்துவதற்கு தகுதியான அறிவியலாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை துவங்கியுள்ளோம். கொரோனா பேரிடர் காரணமாக சற்று தாமதமாகியுள்ளது. விரைவில் அவர்கள் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்தனர். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
Tags:
Wildlife Genetic Research Laboratory Government of Tamil Nadu in the High Court வன விலங்கு மரபணு ஆராய்ச்சி ஆய்வகம் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுமேலும் செய்திகள்
நடிகர் தனுஷின் 'Wunderbar films' தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனல் மீண்டும் செயல்பட தொடங்கியது
கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு
நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் மதுரை வருகை, அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது: எம்.பி. சு. வெங்கடேசன்
சென்னையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி 98 பேர் பலி!!
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் யாரும் பணத்தை இழக்க வேண்டாம்: காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!