இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
2022-01-27@ 01:34:16

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 6 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அப்போது, மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:
Today DMK District Secretaries Meeting General Secretary Duraimurugan இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் துரைமுருகன்மேலும் செய்திகள்
ராஜிவ் காந்திக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அளவுக்கு சீமான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை: கே.எஸ்.அழகிரி தாக்கு
சென்னையில் வரும் 28ம் தேதி சிறப்பு பொதுக்குழு பாமக தலைவராக அன்புமணி தேர்வாகிறார்? ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்க திட்டம்
31 வது நினைவு நாள் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங். கட்சியினர் மலர் அஞ்சலி
சொல்லிட்டாங்க...
மடியில் கனம் இருப்பதால் எதிர்க்கட்சியாக செயல்பட அதிமுக தவறிவிட்டது: டிடிவி தினகரன் பேட்டி
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்