தொடர் சரிவை காணும் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.36,824க்கு விற்பனை..!!
2022-01-25@ 11:36:17

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து 36,824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாரம் தொடங்கியது முதலே தங்கம் விலை சரிவை கண்டிருப்பது நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. சென்னையில், தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. தொடர் சரிவை சந்திப்பதும், சில நாட்களில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்தும் வந்தது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து 36,824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து சவரனுக்கு 16 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,603க்கும், ஒரு சவரன் ரூ.36,824க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் ரூ.39,752 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.68.40க்கும், ஒரு கிலோ ரூ.68,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவை கண்டிருப்பது இல்லத்தரசிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. வரும் நாட்களில் நகை விலை மேலும் வீழ்ச்சி அடையாளம் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை!.. 5 நாட்களில் சவரனுக்கு ரூ. 736 உயர்ந்து ரூ.38,648க்கு விற்பனை!! ..
மே-23: பெட்ரோல் விலை ரூ.102.63 , டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை
45 நாட்களுக்கு பிறகு விலையில் மாற்றம் பெட்ரோல் ரூ.8.22 டீசல் ரூ.6.70 குறைந்தது: சென்னையில் ரூ.102.63, ரூ.94.24க்கு விற்பனை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ரூ.38,536-க்கு விற்பனை
ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை!.. 3 நாட்களில் சவரனுக்கு ரூ. 624 உயர்ந்து ரூ.38,536க்கு விற்பனை!!
ஒரே நாளில் தங்கம் விலை சவரன் ரூ304 உயர்ந்தது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்