கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுவோரிடம் கலெக்டர் நேரில் சென்று நலம் விசாரிப்பு
2022-01-25@ 02:24:07

திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பித்தது. அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கி வருகிறது. இருப்பினும் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு அதற்கான மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வருகின்றனர். அதன்படி திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு ராஜாஜிபுரம் பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ேநற்று நேரடியாக சென்று பார்வையிட்டார்.
அப்போது, அவர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் தினந்தோறும் மருந்து மாத்திரைகள் முறையாக வழங்கப்படுகிறதா என அவர்களிடம் உடல் நலம் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். இதில், அவருடன் நகராட்சி ஆணையர் சி.வி.ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், டாக்டர் வீணா, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
746 பேருக்கு கொரோனா: மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் 746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 265 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 7595 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றால் 1895 பேர் இறந்துள்ளனர். நேற்று கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் பலியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
புதுக்கோட்டை தேர் விபத்து: அஜாக்கிரதையாக செயல்பட்ட கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்.. அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு..!!
திருமண மண்டபம் முன்பதிவு செய்ய வந்தபோது கார் கவிழ்ந்து மணப்பெண் பலி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.40 லட்சம் கனஅடியாக சரிவு
திருமணமான காதலியை பார்க்க நள்ளிரவில் வீட்டின் சுவர் ஏறி குதித்த வாலிபர் சிக்கினார்
சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீது லாரி மோதி விபத்து...
பாலாற்றில் தடுப்பணை அமைத்து நீர்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தல்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!