முகவரி கேட்பது போல் நடித்து இளம்பெண்களிடம் சில்மிஷம்: கொத்தனார் கைது
2022-01-25@ 00:12:18

வேளச்சேரி: நங்கநல்லூரை சேர்ந்த 29 வயது இளம்பெண், கடந்த 10ம் தேதி இரவு 9 மணிக்கு, வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ் சாலை வழியாக மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த நபர், இளம்பெண்ணை வழிமறித்து, மடிப்பாக்கம் செல்ல வழி கேட்டுள்ளார். அந்த இளம்பெண் மொபட்டை நிறுத்திவிட்டு, அவருக்கு வழி கூறிக்கொண்டு இருந்தார். அப்போது, அந்த நபர் திடீரென இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறி கூச்சலிட்டார். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பினார். பின்னர், இதுகுறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசார், விசாரணையில் பள்ளிக்கரணை, ராம் நகர் விரிவு பகுதியை சேர்ந்த கொத்தனார் சந்தோஷ் (20) என்பவர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், தனியாக செல்லும் பெண்களை குறிவைத்தும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் செல்லும்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.
Tags:
Address acting teenager silmisham mason arrested முகவரி நடித்து இளம்பெண் சில்மிஷம் கொத்தனார் கைதுமேலும் செய்திகள்
செயின் பறிக்க முயற்சி சிறுவன் உள்பட 2 பேர் கைது
அண்ணனூர் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் சிக்கிய திருடன்: கூட்டாளிக்கு வலை
மூதாட்டியிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு வலை
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த அரியவகை விலங்குகள் பறிமுதல்: பயணியிடம் விசாரணை
சில்லரை கொடுப்பதில் பெண் பயணியுடன் தகராறு அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கடத்திய பாமக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது
பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் சர்வேயர் கைது
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!