கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே சர்ச்சில் புகுந்து சிலை உடைப்பு: போலீசார் விசாரணை
2022-01-24@ 20:52:11

கோவை: கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே சர்ச்சில் புகுந்து செபஸ்தியார் சிலையை உடைத்து சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே ‘ஹோலி டிரினிட்டி’ சர்ச் உள்ளது. இதன் நுழைவு வாயில் அருகே உள்ள கெபியில் கண்ணாடி கூண்டில் செபஸ்தியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கண்ணாடி கூண்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த செபஸ்தியார் சிலை சேதப்படுத்தப்பட்டு இருந்தது.
இதுகுறித்து சர்ச் துணை பங்குதந்தை பாஸ்டின் ஜோசப் (32) ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கெபியை சுற்றி துணியால் மூடினர். விசாரணையில், பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சர்ச்சில் புகுந்து செபஸ்தியார் சிலையை உடைத்து தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்ச்சில் புகுந்து மர்மநபர்கள் சிலையை உடைத்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
இனி பெட்ரோல் கவலை இல்லை!: பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிக்கலாம் : பழனி மாணவரின் அசாத்திய கண்டுபிடிப்பு.!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கிராமமே கூடி மீன்பிடித்து உற்சாகம்..!!
சுகாதாரத் துறையில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
செஞ்சி அருகே பரபரப்பு ஓபிஎஸ் விழாவில் பொருட்களை அள்ளிச் சென்ற அதிமுகவினர்: பீரோ, சீர்வரிசை பொருட்களுடன் ஓட்டம்
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பால் கச்சா எண்ணெய் வயலில் பரவியது
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு: பாசனத்துக்காக முதல்வர் நாளை தண்ணீர் திறப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்