வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு தமிழகம் முழுவதும் கோயில்கள் இன்று மீண்டும் திறப்பு: பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
2022-01-24@ 20:49:24

சென்னை: வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு தமிழகம் முழுவதும் கோயில்கள் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் கொரோ னா தொற்றின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. நேற்று தினசரி பாதிப்பு என்பது 30,580 என்ற அளவில் இருந்தது. இந்த நிலையில் நாளுக்குநாள் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 6ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இரவுநேர ஊரடங்கு இரவு 10 முதல் காலை 5 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கடந்த 9, 16 மற்றும் நேற்று என 3 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என்று வார நாட்களில் 3 நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் கோயில்கள் திறந்திருக்கும் என்று வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இருப்பினும் கோயிலுக்கு வெளியே பக்தர்கள் நின்று, இறைவனை தரிசனம் செய்து திரும்பிய காட்சிகளை பார்க்க முடிந்தது.
அதுமட்டுமின்றி கோயில்களுக்கு வெளியே கற்பூரம் ஏற்றியும், மாலைகளை அணிவித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த நிலையில் 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு தமிழகத்தில் இன்று காலை மீண்டும் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், காளிகாம்பாள் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் திரளான பக்தர்கள் காலையிலேயே திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முககவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் இன்று காலை முதல் திறக்கப்பட்டன. இதேபோல் 3 நாட்களுக்கு பிறகு திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில், ரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் இன்று அதிகாலை திறக்கப்பட்டது.
இன்று காலை முதலே திரளான பக்தர்கள் கோயில்களுக்கு வந்து தரிசனம் செய்தனர். இதனால் இன்று காலை கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் வசதிக்காக சமூக இடைவெளியுடன் கூடிய தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பள்ளிவாசல்கள், சர்ச்சுகளிலும் இன்று வழக்கம்போல் வழிபாடு நடந்தது.
மேலும் செய்திகள்
வடக்கு, தெற்கு என பிரிக்காதீங்க: கமல், அக்ஷய் குமார் வேண்டுகோள்
பைனான்சியர் கொலை வழக்கு நீதிமன்றத்தில் ரவுடி சரண் : மேலும் 3 பேர் கைது
ரயில் மோதி இளம்பெண் பலி
70 கோடி மதிப்பீட்டில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
மழைநீர் கால்வாய்களில் விதிமீறி கழிவுநீரை வெளியேற்றிய 2,983 இணைப்புகள் துண்டிப்பு: மாநகராட்சி நடவடிக்கை
மது விருந்தில் ஐடி ஊழியர் பலி... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உள்பட 3 பேர் கைது: 3 பார்களுக்கு சீல்
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!