SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுவர்களுடன் பாசமாக பழகும் கோயில் யானை: திருநள்ளாறு கோயிலில் நெகிழ்ச்சி

2022-01-24@ 20:06:12

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இங்கு 17 வயதான பிரக்ரிதி என்ற பெண் யானை உள்ளது. இந்த யானை, கோயிலுக்கு வரும் அனைவரிடமும் அன்பாக பழகி வருகிறது. காரைக்கால் நேதாஜி பகுதியை சேர்ந்த சகோதரர்களான சிறுவர்கள் யுவபாரதி, நாராயணன் ஆகியோர் தினம்தோறும் மாலை நேரத்தில் திருநள்ளார் கோயிலுக்கு யானை பிரக்ருதியை பார்க்க வருவர். யானை பிரக்ரிதியை பார்க்க வரும் போதெல்லாம் வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகளை சிறுவர்கள் வாங்கி வருவர்.

இதனால் நண்பர்கள் போல் 2 பேரிடமும் யானை பிரக்ரிதி பழகி வருகிறது. மேலும் சிறுவர்களுடன் யானை பிரக்ரிதி விளையாடும். பின்னர் வீட்டுக்கு செல்லும்போது யானைக்கு சிறுவர்கள் டாடா காண்பிப்பர். அப்போது பதிலுக்கு தனது தும்பிக்கையால் டாடா சொல்லி சிறுவர்களை ஆசீர்வாதம் செய்து யானை பிரக்ரிதி அனுப்பி வைக்கும். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சிறுவர்களுடன் கோயில் யானை பிரக்ரிதி பாசமாக பழகி வரும் வீடியோவை பார்த்து பலரும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்