உரிய நாள் கடந்த பின்னரும் ஒன்றரை லட்சம் பேர் அலட்சியம்; 2ம் டோஸ் தடுப்பூசி போடுவதில் மாநில அளவில் பின்தங்கியிருக்கும் நெல்லை: சுகாதாரத்துறையினர் கவலை
2022-01-24@ 19:29:23

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் முதல் ேடாஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு 2ம் டோஸ் போடுவதற்கான உரிய நாட்கள் கடந்த பின்னரும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் மெத்தனமாக உள்ளனர். இதனால் சுகாதாரத்துறையினர் கவலையில் உள்ளனர். கொரோனா வைரஸ் மக்கள் வாழ்வுடன் கலந்துவிட்ட கொடிய நோயாக உள்ளது. ெதாடர்ந்து உருமாறும் இந்த ெதாற்று உயிரிழப்புகளையும் உடல்நல குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறது. தற்போது 3ம் அலை ஒமிக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது.
3ம் அலையில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு லேசான பாதிப்பையே ஏற்படுத்துகிறது. 2 டோஸ் போட்டவர்களுக்கு கொரோனா தொற்று மீண்டும் வந்தால் உயிரிழப்பும் மிக குறைந்த சதவீதத்திலேயே உள்ளது. ஆனால் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பலர் அவர்களுக்கு உரிய நாட்கள் கடந்த பின்னரும் 2ம் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் இந்த நிலை நீடிக்கிறது.
இதில் மிக அதிகமாக நெல்லை மாவட்டத்தில் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை கடந்த ஓராண்டில் மொத்தம் 17 லட்சத்து 85 ஆயிரத்து 871 டோஸ் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 11 லட்சத்து 9 ஆயிரத்து 265 பேர் முதல் டோஸ் தடுப்பூசி மட்டும் எடுத்துள்ளனர். 6 லட்சத்து 73 ஆயிரத்து 416 பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்ெகாண்டனர். 3 ஆயிரத்து 190 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். முதல் டோஸ் செலுத்திக்கொண்டு உரிய நாட்கள் கடந்த பின்னர் 2ம் டோஸ் செலுத்தாமல் பலர் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மட்டும் இந்த பட்டியலில் ஒன்றரை லட்சம் பேர் உள்ளனர். இதனால் 2 டோஸ் முழுமையாக செலுத்தும் இலக்கை எட்டுவதில் மாநில அளவில் நெல்லை மாவட்டம் பின்தங்கியுள்ளது. இது சுகாதாரத்துறையினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொலைபேசி மூலம் அழைப்பு, குறுஞ்செய்தி அழைப்பு, நேரடி அழைப்பு என தொடர்ந்து நினைவூட்டல் ஏற்படுத்தினாலும் 2ம் டோஸ் போடுவதற்கு பலர் தயக்கம் காட்டுகின்றனர். சுகாதார ஆய்வாளர்கள், அலுவர்கள் அழைக்கும் போது ஏதாவது காரணம் சொல்லி பின்னர் போட்டுக்கொள்வதாக திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.
மேலும் சில இடங்களில் கடும் வாக்குவாதம் செய்வதும் நடக்கிறது. தொடர்ந்து உருமாற்றத்துடன் உலாவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் உயிரிழப்பில் இருந்து தப்பிக்க 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதே தற்போதைய சிறந்த ஆயுதமாக உள்ளது. பூஸ்டர் டோஸ் போடுவதும் பாதுகாப்பானது. எனவே இதை உணர்ந்து நெல்லை மாவட்டத்தில் தகுதியுள்ளவர்கள் உடனடியாக 2ம் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும் என சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணலீலா கூறினார்.
மேலும் செய்திகள்
ஊட்டி மலைப்பாதையில் வாகனங்களை மறித்த காட்டு யானை
நளினிக்கு 5வது முறையாக பரோல் நீட்டிப்பு
கண் பரிசோதனை முகாமில் பாஜ நிர்வாகி பங்கேற்பு மதுரை விரைவு போக்குவரத்து கழக மேலாளர் சஸ்பெண்ட்
ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் செம்பு பாத்திரத்தில் கிடைத்த புதையல்: ஒப்படைக்க மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
தமிழ்நாட்டில் 10 மாதங்களில் அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சேலத்தில் தீவிர விசாரணை
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!