SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்செந்தூரில் கடும் பனிப்பொழிவு: பொதுமக்கள் அவதி

2022-01-24@ 18:59:44

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் நேற்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. காலை 7 மணி  வரை பனிமூட்டம் நீடித்ததால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகினர். தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் வெயில் கொளுத்தும் நிலையில் திருச்செந்தூரில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை  வரை பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து 7  மணி வரை நகர் முழுவதும் பனி வெள்ளை புகைமண்டலமாக தரையில் இறங்கியது. இதனால்  சாலைகளில் எதிரே வருபவர்கள் கண்களுக்கு புலப்படாத நிலை ஏற்பட்டது. வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதேபோல் திருச்செந்தூர் பகுதி கடற்கரை மற்றும் வயல் பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்