பூமிக்கடியில் சுரங்க சிறை ஆந்திராவில் கண்டுபிடிப்பு
2022-01-24@ 17:59:27

திருமலை: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், சிந்தகொம்மாதிண்ணே மண்டலம் புக்க அக்ரஹாரத்தில் புக்க மல்லேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இதனருகே சுரங்கப்பாதை சிறைச்சாலை இருப்பது தெரியவந்துள்ளது. தரையில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை கண்டு அங்கிருந்தவர்கள் அதற்குள் கீழே இறங்கி சென்று பார்த்தனர். அப்போது சுரங்க பாதை போன்று பிரமாண்டமான அமைப்பு தென்பட்டது. இதுகுறித்து சித்தூர் கடப்பா தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக தொல்லியல் அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த சுரங்கப்பாதை சிறைச்சாலை ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்தது. இது ஒரு பதுங்கு குழி மற்றும் கிடங்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இத்தகைய கட்டமைப்புகள் ரயில் பாதைக்கு அருகில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது’ என தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுரங்க சிறைச்சாலையை பார்வையிட்டு செல்கின்றனர்.
மேலும் செய்திகள்
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய படம்
பான் இந்தியா ஸ்டாராக ஜூனியர் என்டிஆர் தேர்வு
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை மனைவி, மகளை அறையில் அடைத்து கதவில் சுவர் எழுப்பிய கணவன்: ஐதராபாத்தில் பரபரப்பு
அருணாச்சல் எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது சீனா: ராணுவ தளபதி தகவல்
பீகாரில் விரைவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: நிதிஷ் அறிவிப்பு
வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்: சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!