பட்னாவிஸ், பிரமோத் சாவந்த் போல் உத்தரகாண்டில் இளம் தலைவரை தூக்கிவிடும் பாஜக: முட்டுக்கட்டை போடும் மூத்த தலைவர்களால் சிக்கல்
2022-01-24@ 17:45:23

டேராடூன்: மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ், கோவாவில் பிரமோத் சாவந்த் ஆகியோர் போல் உத்தரகாண்டில் இளம் தலைவரான புஷ்கர் சிங் தாமியை வளர்த்துவிட பாஜக தலைமை முடிவெடுத்த நிலையில், மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் உருவானதில் இருந்து பாஜகவும், காங்கிரசும் மாறி மாறி ஆட்சியை கைப்பற்றி வருகின்றன. முன்னாள் முதல்வர்கள் பி.சி.கந்தூரி (பாஜக), ஹரிஷ் ராவத் (காங்கிரஸ்) போன்றோர் கடந்த தேர்தலில் தோல்வியடைந்ததால், இந்த முறை இரண்டாம் தலைமுறை தலைவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் 46 வயதான புஷ்கர் சிங் தாமி கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
பாஜகவின் மத்திய தலைமையின் தலையீட்டால் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு புஷ்கர் சிங் தாமிக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டதாக பேசப்பட்டது. மாநில பாஜகவில் கோஷ்டி பூசல் அதிகரித்துள்ள நிலையில் இன்னும் 15 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் சட்டமன்றத் தொகுதியான கதிமா தொகுதியில் போட்டியிட சில மூத்த கட்சித் தலைவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் கடந்த தேர்தலின் போது காதிமா தொகுதியில் காங்கிரசின் புவன் சந்திர கப்டி 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அதனால் அந்த தொகுதிக்கு பாஜக மூத்த தலைவர்கள் குறிவைத்துள்ளனர். ஆனால் கட்சி தலைமையானது மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களை போன்று உத்தரகாண்டிலும் இளம் தலைவர்களை உருவாக்க முயற்சித்து வருகிறது. அதன்படி மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ், கோவாவில் பிரமோத் சாவந்த் ஆகியோர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் புஷ்கர் சிங் தாமியையும் கட்சி தலைமை முன்னிருத்தி வருவதாக தகவல்கள் தெரிவிகின்றன.
மேலும் செய்திகள்
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய படம்
பான் இந்தியா ஸ்டாராக ஜூனியர் என்டிஆர் தேர்வு
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை மனைவி, மகளை அறையில் அடைத்து கதவில் சுவர் எழுப்பிய கணவன்: ஐதராபாத்தில் பரபரப்பு
அருணாச்சல் எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது சீனா: ராணுவ தளபதி தகவல்
பீகாரில் விரைவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: நிதிஷ் அறிவிப்பு
வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்: சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!