கூலி உயர்வு கேட்டு கோவையில் விசைத்தறியாளர்கள் ஆர்ப்பாட்டம்
2022-01-24@ 17:33:35

கோவை: கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகளை நிறுத்தி கடந்த 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லடம் ரகத்திற்கு 20 சதமும், சோமனூர் ரகத்திற்கு 23 சதமும் கூலி உயர்வு தர ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்தனர். ஆனால், தொழில் நிலவரம் சரியில்லாத காரணத்தினால் தற்போது 10 சதம் கூலி உயர்வும் பின்னர் மீதியும் தருவதாக தெரிவித்தனர். அதனை விசைத்தறியாளர்கள் ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் முன்னிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் திருப்பூர், கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்லடம், சோமனூர், திருப்பூர், அவிநாசி பகுதியை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற ஜவுளி உற்பத்தியாளர்கள், தற்போது விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் நூல் விலை உயர்வு, உற்பத்தி செலவை காட்டிலும் துணி விற்பனை விலை அதிகமாக இருப்பதாகவும் தொழில் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் தங்களால் உடனடியாக கூலி உயர்வை அமல்படுத்த இயலாத நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் வரும் 27ம் தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்தும், உடனடியாக கூலி உயர்வு வழங்கக்கோரியும் 24ம் தேதி காரணம்பேட்டையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விசைத்தறியாளர்கள் அறிவித்தனர். இதன்படி கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்க தலைவர் பழனிச்சாமி, தலைமையில், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, பல்லடம் சங்க தலைவர் வேலுசாமி ஆகியோர் முன்னிலையில் இன்று காரணம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஊட்டி மலைப்பாதையில் வாகனங்களை மறித்த காட்டு யானை
நளினிக்கு 5வது முறையாக பரோல் நீட்டிப்பு
கண் பரிசோதனை முகாமில் பாஜ நிர்வாகி பங்கேற்பு மதுரை விரைவு போக்குவரத்து கழக மேலாளர் சஸ்பெண்ட்
ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் செம்பு பாத்திரத்தில் கிடைத்த புதையல்: ஒப்படைக்க மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
தமிழ்நாட்டில் 10 மாதங்களில் அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சேலத்தில் தீவிர விசாரணை
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!