SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணா பல்கலைக்கழக தேர்வு தொடர்பாக வழிகாட்டுதல்கள் வெளியீடு

2022-01-24@ 17:27:31

சென்னை: அண்ணா பல்கலைக்கழக தேர்வு தொடர்பாக வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே எழுதும் வகையில் வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் முன்னதாக வெளியிட்டிருந்தது. ஆன்லைனில் நடைபெறும் இந்த செமஸ்டர் தேர்வானது பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் முதல் வாரம் நிறைவடையும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் கூறி இருந்தது.

இந்நிலையில் அந்த தேர்வுகள் தொடர்பாக வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அரியர் எழுதும் மாணவர்கள், இறுதியாக பயின்ற கல்லூரிகளை தொடர்பு கொண்டு தேர்வு அனுமதி சீட்டை பெறலாம் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் க்ளாஸ்ரூம் அல்லது மின்னஞ்சல் வழியாக வினாத்தாள்கள் அனுப்பப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. தேர்வு எழுதிய விடைத்தாள்களை அஞ்சல், கொரியர் மூலம் மட்டுமே மாணவர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதில் கூறி இருக்கிறது. விடைத்தாளில் பதிவு எண், பெயர், பாட குறியீடு, பாட பெயர் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

  • odisha_park

    இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்