ஜி.ஹெச். பெண் ஊழியர் பலாத்கார முயற்சியில் கொலை; 2 பேர் கைது
2022-01-24@ 15:20:54

புதுக்கோட்டை: புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்தவர் நாகரத்தினம்(65). இவர் புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் தற்காலிக உதவியாளராக பணியாற்றி வந்தார். மருத்துவமனை வளாகத்தில் ஓய்வறையில் தங்கி பணிக்கு சென்று வந்தார். கடந்த 20ம் தேதி காலை மருத்துவமனை ஊழியர்கள் பணிக்கு வந்த போது நாகரத்தினம் தலையில் பலத்த காயங்களுடன் தனது அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மருத்துவமனை வளாகத்தை சுற்றி பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். இதில் சந்தேகப்படும்படி 2 பேர் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
இதில் ஒருவரை புதுக்கோட்டை மீன்மார்க்கெட் அருகே போலீசார் பிடித்தனர். விசாரணையில், அவர் சிவா என்கிற ஜீவானந்தம்(46) என தெரியவந்தது. இவர், வீரராசு என்பவருடன் சேர்ந்து நாகரத்தினத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், சம்பவத்தன்று 2 பேரும் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஓய்வறையில் தங்கியிருந்த நாகரத்தினத்தை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே அவரை அடித்து கொலை செய்துள்ளனர். இதனை வாக்குமூலத்தில் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்றனர்.
மேலும் செய்திகள்
செயின் பறிக்க முயற்சி சிறுவன் உள்பட 2 பேர் கைது
அண்ணனூர் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் சிக்கிய திருடன்: கூட்டாளிக்கு வலை
மூதாட்டியிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு வலை
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த அரியவகை விலங்குகள் பறிமுதல்: பயணியிடம் விசாரணை
சில்லரை கொடுப்பதில் பெண் பயணியுடன் தகராறு அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கடத்திய பாமக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது
பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் சர்வேயர் கைது
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!