வாணியம்பாடி அருகே வயல் வெளியில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
2022-01-24@ 12:55:16

வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே வயல்வெளியில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.வாணியம்பாடி அருகே கலந்திரா ஊராட்சி அடுத்த கினிக்கிட்டி வட்டம் உள்ளது. இப்பகுதியில் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணி புரியும் ராஜு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், நேற்றுமுன்தினம் இரவு கால்வாய் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக திருப்பத்தூர் வனச்சரகர் பிரபுவுக்கு தகவல் கொடுத்தார். அதன்படி, வனகாப்பாளர் அண்ணாமலை மற்றும் கிருஷ்ணன் சவுந்தர், சதீஷ், சச்சின் ஆகியோர் விரைந்து சென்று கிராம மக்கள் உதவியுடன் மலைப்பாம்பை பிடித்து ஏலகிரி மலை காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.
மேலும் செய்திகள்
ஊட்டி மலைப்பாதையில் வாகனங்களை மறித்த காட்டு யானை
நளினிக்கு 5வது முறையாக பரோல் நீட்டிப்பு
கண் பரிசோதனை முகாமில் பாஜ நிர்வாகி பங்கேற்பு மதுரை விரைவு போக்குவரத்து கழக மேலாளர் சஸ்பெண்ட்
ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் செம்பு பாத்திரத்தில் கிடைத்த புதையல்: ஒப்படைக்க மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
தமிழ்நாட்டில் 10 மாதங்களில் அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சேலத்தில் தீவிர விசாரணை
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!