வாழை சாகுபடியில் ஊடுபயிராக வேர்க்கடலை-விவசாயிகள் ஆர்வம்
2022-01-24@ 12:48:13

குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி பகுதியில் வாழை, முருங்கை, முந்திரியில் ஊடுபயிராக வேர்க்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடலூர் மாவட்டத்திற்கு வேர்க்கடலை மாவட்டம் என்ற சிறப்பு பெயர் உண்டு. மாவட்டத்தில், குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் வேர்க்கடலை பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம்.
நடப்பாண்டில் பெய்த வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், புலியூர், வெங்கடாம்பேட்டை, சத்திரம், விருப்பாச்சி, தையல்குணம்பட்டினம், வடக்குத்து, பெத்தநாயக்கன்குப்பம், அகரம், தம்பிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 8 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் வேர்க்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அதில், வெங்கடாம்பேட்டை, சத்திரம், குள்ளஞ்சாவடி, வழுதலம்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் வாழை, முருங்கை, முந்திரி உள்ளிட்ட மரப்பயிர்களில் ஊடுபயிராக வேர்க்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஊட்டி மலைப்பாதையில் வாகனங்களை மறித்த காட்டு யானை
நளினிக்கு 5வது முறையாக பரோல் நீட்டிப்பு
கண் பரிசோதனை முகாமில் பாஜ நிர்வாகி பங்கேற்பு மதுரை விரைவு போக்குவரத்து கழக மேலாளர் சஸ்பெண்ட்
ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் செம்பு பாத்திரத்தில் கிடைத்த புதையல்: ஒப்படைக்க மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
தமிழ்நாட்டில் 10 மாதங்களில் அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சேலத்தில் தீவிர விசாரணை
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!