SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலி அரசு பணியிடங்களை நிரப்ப கோரி மாணவர்கள் சங்கத்தினர் நூதன போராட்டம்-திருப்பதியில் நடந்தது

2022-01-24@ 12:45:00

திருப்பதி :  காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப கோரி மாணவர்கள் சங்கத்தினர் திருப்பதியில் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதியில் அகில இந்திய மாணவர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில செயலாளர் சிவா தலைமையில் திருப்பதி சீனிவாசபுரம் அருகே உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,  ஆந்திர மாநில அரசு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரி மீன்களை வெட்டி வியாபாரம் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதில், அவர் பேசியதாவது:

ஆந்திர மாநிலத்தில் லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். அரசு காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து அரசு பணியிடங்களை நிரப்பப்படும் என உறுதி அளித்தார். ஆனால் இதுவரை அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மேலும் அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு வயது 62 ஆக உயர்த்தியது திரும்பப் பெற வேண்டும்.

ஏற்கனவே இருந்தது போல 60 வயது நீடிக்க வேண்டும். படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாததால் சாதாரண கூலி வேலைகளுக்கு  பிற மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநில அரசு காலி பணியிடங்களுக்கு நோட்டிபிகேஷன் வெளியிடவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாணவர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்