கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மும்பையில் 16 நாள் இடைவேளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன!!
2022-01-24@ 12:19:59

மும்பை : கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மும்பையில் 16 நாள் இடைவேளிக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது மராட்டிய மாநிலம் தான். குறிப்பாக தலைநகர் மும்பையில் நோய் பரவல் உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த டிசம்பரில் தான் திறக்கப்பட்டன. இந்த நிலையில், ஒமிக்ரான் பரவல் காரணமாக கடந்த 8ம் தேதி மீண்டும் மூடப்பட்ட பள்ளிகள் 16 நாள் இடைவேளிக்கு பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ளன. 1 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமல்லாது மழலையர் வகுப்புகளுக்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. \
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே கட்டாயம் பள்ளிக்கு வருமாறு யாரையும் நிர்பந்திக்கவில்லை என்று கல்வி அமைச்சர் வர்ஷா கேக்கவாட் தெரிவித்துள்ளார். புனே மற்றும் அவுரங்காபாத்தில் நோய் பரவல் அதிகரிப்பை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படவில்லை.இதே போன்று சில பகுதிகளில் பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாவட்ட மாநகராட்சி நிர்வாகங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய படம்
பான் இந்தியா ஸ்டாராக ஜூனியர் என்டிஆர் தேர்வு
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை மனைவி, மகளை அறையில் அடைத்து கதவில் சுவர் எழுப்பிய கணவன்: ஐதராபாத்தில் பரபரப்பு
அருணாச்சல் எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது சீனா: ராணுவ தளபதி தகவல்
பீகாரில் விரைவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: நிதிஷ் அறிவிப்பு
வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்: சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!