கோவையில் ஊதிய உயர்வு கோரி விசைத்தறியாளர்கள் போராட்டம்: 8 ஆண்டுகளாக கூலி உயர்வில்லாமல் பணிபுரிவதாக வேதனை
2022-01-24@ 12:03:02

கோவை: கோவையில் ஊதிய உயர்வு கோரி விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இன்று அடுத்தகட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு கோரி இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது. சுமார் 1000திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 8 வருடமாக ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து தங்களுக்கு உரிய அளவிலான ஊதிய உயர்வு கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சோகனூர் பகுதியில் தயாரிக்கக்கூடிய விசைத்தறி பொருட்களுக்கு 23% சதவீத ஊதிய உயர்வும், பல்லடம் பகுதியில் தயாரிக்கக்கூடிய விசைத்தறி பொருட்களுக்கு சுமார் 20% ஊதிய உயர்வும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனாலும் அமைச்சர்கள் முன்னிலையில் ஜவுளி தொழில்துறையினருடன் நடைபெற்ற ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் நவம்பர் 24ஆம் தேதி அரசு இருதரப்பினரையும் அழைத்து 23 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இந்த ஊதிய உயர்வு டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் 60 நாட்களாகியும் கூட அரசு அறிவித்த கூலி உயர்வை வழங்க மறுத்ததால் இன்று ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி வழங்க மறுப்பதை கண்டித்தும் தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கின்ற அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் இறுதிமுடிவு எடுக்கப்பட்டு கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பது தான் இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் இன்று வரை 8 ஆண்டுகளாகியும் கூட கூலி உயர்வு வழங்கப்படவில்லை. ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு என பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி கூலி வழங்க மறுத்து வருகின்றனர். கடந்த ஒரு வருட காலமாக 14 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று இறுதியில் அமைச்சர்களின் தலைமையில் 20, 23 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று அரசு அறிவித்ததை இன்று வரை அமல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். எனவே ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் தினசரி ரூ.50 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. இதுவரை ரூ.700 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
Tags:
விசைத்தறியாளர்கள்மேலும் செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை நெருங்கியது.! டெல்டா பாசனத்திற்கு 24ம் தேதி முதல்வர் தண்ணீர் திறக்கிறார்
பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையில் நல்லது எதுவும் இல்லை; அமைச்சர் பொன்முடி பேச்சு
அரிசி, மண்ணெண்ணை கடத்தல் தடுப்பால் ரூ.2,630 கோடி சேமிப்பு; அமைச்சர் சக்கரபாணி தகவல்
கோயில் குளத்தை தூர்வாரிய போது சோழர் காலத்து 7 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு
உதகைப் பயணத்தில் இன்று பழங்குடியினரான தோடர்களின் கிராமத்திற்குச் சென்று, அவர்களது தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்