அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!!
2022-01-24@ 11:12:41

சென்னை; அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம் தொட்டுள்ள நிலையில் அனைத்து கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதேசமயம் இறுதியாண்டு மாணவர்கள் இறுதி பருவ தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'ஆன்லைன் செமஸ்டர் தேர்வை 20,00,875 மாணவர்கள் எழுதுகின்றனர். கடந்த நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு ஆன்லைனிலும், இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாகவும் நடைபெறும். அரியர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும். இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் பயிலும் 52,307 மாணவர்களும், 4.51 லட்சம் பொறியியல் மாணவர்கள் பயன்பெறுவார்கள். ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறுவதால் 12 .94 லட்சம் கலைக்கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள், ஆன்லைன் தேர்வால் 1.96 லட்சம் பாலிடெக்னிக் மாணவர்களும் பயனடைவார்கள்' என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும் செய்திகள்
திண்டிவனம் நோக்கி செல்லும் பஸ்கள் மாமண்டூர் மோட்டலில் நிற்க வேண்டும்: போக்குவரத்துத்துறை உத்தரவு
வங்கக்கடலில் காற்று சுழற்சி எதிரொலி தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
இலங்கை சிறையில் இருந்து 4 மீனவர் விடுதலை
மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைவு தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் விலை இரு மடங்கு அதிகரிப்பு
மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை சட்ட விதிகளை மீறிய ஆளுநர் உச்ச நீதிமன்றம் கண்டனம்
பேரறிவாளனை விடுவித்தது உச்சநீதிமன்றம் இந்திய வரலாற்றில் மீண்டும் மீண்டும் நினைவுகூரத்தக்க தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!