குடியரசு தின விழா கொண்டாட்டம்!: சென்னை மெரினா கடற்கரை சாலையில் முப்படை வீரர்கள், காவல்துறையினர் இறுதிக்கட்ட ஒத்திகை..!!
2022-01-24@ 11:11:21

சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. 73வது குடியரசு தினவிழா வரும் 26ம் தேதி விமர்சியாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சென்னை மெரினா - காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் தேசிய கோடியை ஏற்றவுள்ளார். இதையடுத்து முப்படை, மாநில காவல்துறை, கடலோர காவல்துறையின் அணிவகுப்பு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்காக ஏற்கனவே கடந்த 20 மற்றும் 22ம் தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்ற நிலையில், இன்று முழு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முழு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
விழாவிற்கு ஆளுநரும், முதலமைச்சரும் வருவது போலவும், அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை நடைபெற்றது. இதனை தொடர்ந்து முப்படையினர், துணை ராணுவம், கடலோர காவல்படை, தமிழக காவல்துறை, தீயணைப்புப்படை மற்றும் தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு பயிற்சி மேற்கொண்டனர். இசை வாத்தியங்கள் முழங்க அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து சென்றன. அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டது. குடியரசுதின ஒத்திகை பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு, மாநகர காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
குடியரசு தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினருடன் ஒன்றிணைந்து மோப்ப நாய்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சேலம், திருச்சி, மதுரை, கோவை, நெல்லையில் ஒரு ரயில் நிலையத்திற்கு 50 பேர் வீதம் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மேலும் செய்திகள்
வங்கக்கடலில் காற்று சுழற்சி எதிரொலி தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
இலங்கை சிறையில் இருந்து 4 மீனவர் விடுதலை
மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைவு தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் விலை இரு மடங்கு அதிகரிப்பு
மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை சட்ட விதிகளை மீறிய ஆளுநர் உச்ச நீதிமன்றம் கண்டனம்
பேரறிவாளனை விடுவித்தது உச்சநீதிமன்றம் இந்திய வரலாற்றில் மீண்டும் மீண்டும் நினைவுகூரத்தக்க தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
அற்புதம்மாள் நடத்திய நீண்ட, நெடிய சட்டப்போராட்டம்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!