குமரி அருகே கோவளம் கடற்கரை பகுதியில் திடீரென கரை ஒதுங்கிய 100-க்கும் மேற்பட்ட டால்பின்கள்; மக்கள் அதிர்ச்சி..!!
2022-01-24@ 10:46:46

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே கோவளம் கடற்கரை பகுதியில் 100க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் திடீரென 100க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கின. இவற்றில் பல டால்பின்கள் உயிருக்கு போராடின . இதையடுத்து அப்பகுதி மீனவர்கள் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கடலோர பாதுகாப்பு போலீசார், மீனவர்களுடன் இணைந்து உயிருக்கு போராடிய டால்பின்களை பத்திரமாக மீட்டு மீண்டும் கடலுக்குள் விட்டனர்.
கரை ஒதுங்கிய டால்பின்களில் ஒன்று மட்டும் உயிரிழந்தது. மீனவர்கள் மற்றும் கடலோர போலீசாரின் துரிதமான நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான டால்பின்கள் உயிர் தப்பித்தன. இயற்கைக்கு மாறான கடல் போக்கு காரணமாக கன்னியாகுமரியில் மேற்கு கடற்கரை பகுதிகளில் இதுபோன்று டால்பின்கள் இடம்பெயர்வதும், கரை ஒதுக்குவதும் அவ்வப்போது நடப்பது உண்டு என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை நெருங்கியது.! டெல்டா பாசனத்திற்கு 24ம் தேதி முதல்வர் தண்ணீர் திறக்கிறார்
பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையில் நல்லது எதுவும் இல்லை; அமைச்சர் பொன்முடி பேச்சு
அரிசி, மண்ணெண்ணை கடத்தல் தடுப்பால் ரூ.2,630 கோடி சேமிப்பு; அமைச்சர் சக்கரபாணி தகவல்
கோயில் குளத்தை தூர்வாரிய போது சோழர் காலத்து 7 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு
உதகைப் பயணத்தில் இன்று பழங்குடியினரான தோடர்களின் கிராமத்திற்குச் சென்று, அவர்களது தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்