ஐரோப்பாவில் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வருகிறது: உலக சுகாதார அமைப்பு
2022-01-24@ 10:32:45

ப்ருஸ்செல்ஸ்: தற்போதைய ஒமிக்ரான் அலை தணிந்தவுடன் ஐரோப்பாவில் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் கொரோனாவின் முடிவை எதிர்நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குனர் கேன்ஸ் கிளச் தெரிவித்துள்ளார். தற்போதைய ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் மார்ச் மாதத்திற்குள் 60% பேருக்கு பரவும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த அலை குறைந்தவுடன் மக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் தொற்று பாதிப்பு மிகவும் குறைந்துவிடும் என அவர் கூறினார். டெல்டா வகை கொரோனாவை விட ஒமிக்ரான் வகை தொற்றின் பாதிப்பு குறைவாக இருப்பதாக கூறிய அவர் பெருந்தொற்று என்ற நிலையில் இருந்து சளி போன்ற பருவ நோயாக மாறக்கூடும் என்று குறிப்பிட்டார். எனினும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கேன்ஸ் கிளச் கூறினார்.
Tags:
கொரோனாமேலும் செய்திகள்
எகிப்து சர்ச்சில் தீ விபத்து 41 பேர் பலி
தைரியம் என்றால் இப்படி இருக்கணும், ஜெய்சங்கரின் வீடியோவை மக்களுக்கு காட்டிய இம்ரான்; பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தானுடன் போர் பயிற்சியா? இலங்கை அரசு மறுப்பு
அமெரிக்க எம்பி.க்கள் தைவானில் பயணம்; சீனா கடும் எதிர்ப்பு
பைடன் அதிர்ச்சி
ருஷ்டிக்கு வைக்கப்பட்ட வென்டிலேட்டர் நீக்கம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!