வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்களை ரப்பர் கட்டை, இரும்பு கம்பியால் தாக்கிய கடற்கொள்ளையர்கள் : 3 மீனவர்கள் படுகாயம்!!
2022-01-24@ 09:45:25

நாகை: வேதாரண்யம் அருகே கோடிக்கரைக்கு கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த புஷ்பவனத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் , நாகமுத்து , ராஜேந்திரன் ஆகியோர் நாட்டு படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 8 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது நள்ளிரவில் நாட்டு படகை சுற்றி வளைத்த இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் கடற்கொள்ளையர்கள் மீனவர்களை ரப்பர் கட்டை, இரும்பு கம்பி, அரிவாள் போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 3 மீனவர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் கடலில் விரிக்கப்பட்டிருந்த சுமார் கிலோ 300 வலை, செல்போன் -1 , பேட்டரி 1, எக்கோ சிலிண்டர் 1, வாக்கி டாக்கி 1, ஜிபிஎஸ் 1, டீசல் 10 லிட்டர் ஆகிய பொருட்களை கொள்ளை அடுத்துச் சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, இன்று காலை ஆறு காட்டுத்துறை, கடற்கறைக்கு திரும்பிய மீனவர்கள் மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஒரு பக்கம் இலங்கை கடற்படையினரால் தாக்குதல் இன்னொரு பக்கம் திடீரென கடற்கொள்ளையர்கள் தாக்குதல் என தமிழக மீனவர்கள் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 36 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 39 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேரறிவாளன் அவரது குடும்பத்தினர் சந்திப்பு: முதலமைச்சர் எங்களை ரொம்ப மகிழ்ச்சியா வரவேற்றாரு; சந்திப்புக்கு பின் அற்புதம் அம்மாள் பேட்டி
முதலமைச்சர் ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு : தயார் அற்புதம்மாள் பேட்டி
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம்
பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.9 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..!!
சீனர்கள் 263 பேருக்கு சட்டவிரோதமாக இந்திய விசா வழங்கிய விவகாரம்: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்து செல்ல சிறப்பு நீதிமன்றம் அனுமதி
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!