வியாபாரிகள், பொதுமக்கள் இன்றி கோயம்பேடு மார்க்கெட் வெறிச்சோடியது
2022-01-23@ 15:28:32

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் தற்போது தினசரி பாதிப்பில் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக அனைவரும் கண்டிப்பாக முககவம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் வார இறுதி நாட்களில் கோயில்களை மூடுதல், ஞாயிறு முழுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து வருகின்றனர். இருப்பினும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மார்க்கெட் உள்ளிட்டவைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது.
மேலும், கடந்த வாரங்களில் கொண்டாடப்பட்ட பண்டிகையாலும் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தின் மிக பெரிய மொத்த விற்பனை சந்தையாக ேகாயம்பேடுக்கு தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். விடிய, விடிய காய்கறிகளை ஏற்றி இறக்கும் லோடுமேன்கள், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் லாரி டிரைவர்கள், இரவு முழுக்க டிபன் விற்கும் சிறு கடைகள், சில்லறை வர்த்தகத்திலும் மொத்த வர்த்தகத்திலும் வியாபாரத்தில் சுறுசுறுப்பு காட்டும் வியாபாரிகள் என களைகட்டும். அந்த வகையில் தினமும் 700க்கும் மேற்பட்ட காய்கறி வாகனங்கள் வருகின்றன.
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் 6 ஆயிரம் டன் காய்கறிகள் மற்றும் டன் கணக்கில் பூக்கள் வரத்து உள்ளது. அவற்றை ஏற்றி இறக்கும் வகையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 3,000 பேர், வியாபாரிகள் 8,000 ஆயிரம் பேர் உள்ளனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த மார்க்கெட், கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மூடப்பட்டு, சில மாதங்கள் திருமழிசையில் இயங்கி வந்தது. பின்னர் மீண்டும் கோயம்பேட்டில் இயங்கி வருகிறது. தற்போதும் தொற்று அதிகரித்து வந்தாலும், பலர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதனால் தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. அதற்கேற்றார்போல் தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று முழு ஊரடங்கு என்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த மார்க்கெட், வியாபாரிகள், பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மீண்டும் நாளை அதிகாலை முதல் களைகட்டும்.
மேலும் செய்திகள்
டூவீலர் பின்னிருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்; சென்னையில் நாளை முதல் சிறப்பு வாகன சோதனை.! போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை
சட்டவிரோதமாக மதுபான விருந்து நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் ஆணையர் எச்சரிக்கை.!
மீன் பிடி தடை காலம், கேரள மீன் வரத்து குறைவு எதிரொலி: மீன்கள் விலை கிடுகிடு உயர்வு,
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
பெட்ரோல், டீசல் மீதான வரியை மேலும் குறைக்க வேண்டும்; ஒன்றிய அரசுக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்
ஆவடி திமுக சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம்; அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்